கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் .
தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.
கொய்யா பழத்தில் அதிகமாக வைட்டமின் சி உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் இது நல்லது .
கரும்பு சாறு, பருகும் நபருக்கு உடலில் சீக்கிரத்திலேயே புத்துணர்ச்சியும், உற்சாகமும் தருகிறது.
கோடை காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்சத்து குறைவதால் , ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு ”ஹீட் ஸ்ட்ரோக்” எனப்படும் மயக்கம் ஏற்படுகிறது . இதை தவிர்ப்பதற்கு தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிடலாம் .
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.