Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறுதிமொழி ஏற்பு…. தொழுநோய் விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் டாக்டர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு முடக்கவியல் நிபுணர் ஷீலா முன்னிலை வகித்துள்ளார்.

இதனை அடுத்து தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 அல்லது 12 மாதம் மருந்து எடுத்துக் கொண்டால் முழுமையாக குணம் அடையலாம் என இம்முகாமில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் பழனி மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பின்னர் அனைவரும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மேலும் ரெட்டிபாளையம் உள்பட 3 கிராமங்களில் 100 நாள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று சுகாதார மேற்பார்வையாளர் பழனி தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Categories

Tech |