Categories
இந்திய சினிமா சினிமா

‘Suicide or Murder’… அச்சு அசலாக மீண்டும் வருகிறார் சுஷாந்த்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயிலாக இருக்கும் நபரை  வைத்து புதிய திரைப்படம் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள  தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்தின் தற்கொலைக்கு வெவ்வேறு  காரணங்கள் கூறி வந்தாலும், மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கை வரலாறை சிலர் திரைப்படமாக்க முயற்சி செய்துகொண்டிருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, புதிதாக தொடங்கவுள்ள (VSG Binge) என்ற ஓடிடி தளத்தில் ஒரு புது திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படம்  பற்றிய அறிவிப்பு அந்த தளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் “சிறிய ஊரிலிருந்து வந்த ஒரு இளைஞன் திரைத்துறையில் பெரிய நட்சத்திரமாகிறான். இதுவே அவனது பயணம். வெளியிலிருந்து திரையுலகில் நுழைபவராக நடிக்கும் பாத்திரத்தில் சச்சின் திவாரியை அறிமுகம் செய்கிறோம்” என்று ஒரு போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சுஷாந்த் போன்றே இருக்கும் சச்சின் திவாரி என்ற டிக்டாக் நட்சத்திரம் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறார். ‘Suicide or Murder’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலும் சுஷாந்தின் மரணத்தைப் பற்றி பேசும் படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |