சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று எழுதியுள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்னர் கூட இன்ஸ்டாகிராமில் புதிதாக எடுக்கப்பட்ட தனது போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். இப்படி இருந்தவர் எவ்வாறு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
அவரின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை இது.
இன்று அதிகாலை
ஒரு இளம் நடிகை தற்கொலை
செய்துகொண்டாள்
அவளது புன்னகைக்கும்
புகைப்படங்கள் எங்கும் பரவுகின்றன
அவளுக்கு வருத்தமான கணம் என
ஒன்று இல்லவே இல்லாததுபோல
எல்லாப்படங்களிலும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்
அந்தப் புன்னகையைத்தவிர
அவள் எதுவுமே அல்ல
என்பதுபோலிருக்கிறது
எங்கும் ஆழமான
ஒரு பெருமூச்சு பரவுகிறது
அவளுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்
ஒரு மெல்லிய இழப்புணர்வை
அடைகிறார்கள்
மேலும் காரணங்கள் குறித்த
நாடகப்பிரதிகள் எழுதப்படுகின்றன
ஒரு குளிர்கால விடியலில்
ஒரு புன்னகை தற்கொலை
செய்துகொள்கிறது
ஒருத்தியின் வசீகரம்
தற்கொலை செய்துகொள்கிறது
அவளது வயது
தற்கொலை செய்துகொள்கிறது.