Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த காதல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடித்த கர்ப்பிணி பெண்..!!

கொடைக்கானலில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருடன் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் மே மாதம் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் கொடைக்கானலில் உள்ள எரிச்சாலை பகுதி அருகே இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  பிரதீப் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பிரதீப்குமாருக்கும், தீபாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதீப்குமார் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

தீபா அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் பிரதீப் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட சிலர் இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரதீப்குமாரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |