திருப்பத்தூரில் தந்தை செல்போன் வாங்கித் தராத விரக்தியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் மூர்த்தி வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செந்தமிழ் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படிப்பை நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்வன் தனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை கூலி வேலை செய்வதால் அதிக விலை கொடுத்து தன்னால் ஆண்ட்ராய்டு போன் வாங்கி தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் செந்தமிழ்ச்செல்வன் மனவேதனை அடைந்துள்ளார்.
சம்பவத்தன்று செந்தமிழ்ச்செல்வன் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அவரது பெற்றோர் செந்தமிழ்ச்செல்வனைச் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் கிருஷ்ணகிரி தனியார் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செந்தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.