பெரம்பலூரில் குடிக்கும் பழக்கத்தை தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி என்ற மகன் இருந்தார். இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனை கார்த்தியின் தந்தை செல்வராஜ் மோசமாக கண்டித்துள்ளார். இதனால் கார்த்தி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்தி, வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தனி அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் கார்த்தியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.