Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி தாங்க முடியல… இளம்பெண்ணின் விபரீத முடிவு… கண்ணீர் வடித்த குடும்பம்..!!

வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே வன்னியபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் பல நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூச்சி மருந்தை குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கீதாவின் உறவினர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் கீதா உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |