Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 5 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் டி.ஆர்.நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவுக்கும் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவருக்கும் இடையே திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

அதன்பின் வினோத்குமார், சந்தியா ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சந்தியா சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சந்தியா வெள்ளகோவில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவின் பெற்றோர் ஹோட்டலுக்கு சென்று விட்டனர். அப்போது சந்தியா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அதன்பின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது சந்தியா தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சந்தியாவை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |