ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய மெக்காபியின் தற்கொலைக்கு குற்றம் கூறிய, அவருடைய வழக்கறிஞரான ஜூலியன் அசாங்க் என்பவரே “அடுத்ததாக தற்கொலை செய்யவுள்ளார்” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகில் மிகவும் புகழ்பெற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்காபி கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறிவிட்டு, அமெரிக்காவிலிருந்து பார்சிலோனா என்னும் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் மீது அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி என்னும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பார்சிலோனா சென்ற ஜான் மெக்காபியை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது. இதற்கிடையே ஜான் மெக்காபி பார்சிலோனா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜான் மெக்காபி பார்சிலோனா சிறையில் திடீரென்று தற்கொலை செய்துள்ளார்.
இதற்கு ஜான் மெக்காபியின் வழக்கறிஞரான ஜூலியன் அசாங்க், காரணமின்றி வெகுகாலமாக சிறையில் அடைக்கும் இந்தக் கொடூரமான நடைமுறையே ஜான் மெக்காபியின் தற்கொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இவருடைய இந்தக் கூற்றுக்கு அமெரிக்காவின் வழக்கறிஞரான எட்வர்ட் என்பவர், ஜான் மெக்காபியின் வழக்கறிஞரை எச்சரித்துள்ளார்.
அதாவது ஜூலியன் அசாஞ்கே கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து நீதிமன்றம் அவரை அமெரிக்க நாட்டிற்கு ஒப்படைப்பதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. எனவே ஜூலியன் அசாங்க் தான் அடுத்ததாக தற்கொலை செய்யவுள்ளார் என்று அமெரிக்க வழக்கறிஞர் ட்வீட் செய்துள்ளார்.