சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம் காரையூர் பகுதியில் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்த சந்தியாகு என்பவரது மனைவி ரேணுகா ( 57 ) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அதன் பின்பு அவர் இரவு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து கண்டவராயன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.