புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மலர்விழி விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மலர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து மலரின் தந்தை கணவர் பழனிவேல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் பழனிவேலை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.