Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த கல்லூரி மாணவன்… தஞ்சையில் நடந்த சோகம்…!!

வயிற்று வலியால் துடித்து வந்த கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் இருக்கும் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் வல்லரசு என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக வல்லரசு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் வல்லரசு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததால் நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லரசின் தந்தை துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |