Categories
உலக செய்திகள்

“சுகாதார பாஸ் கட்டாயம்”, பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு…. வேகமாக பரவி வரும் கொரோனாவின் 4 ஆவது அலை….!!

பிரான்சில் கொரோனா குறித்த “சுகாதார பாஸ்” இன்றி வெளியே செல்லும் பொதுமக்களுக்கு சுமார் 135 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாடு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்சில் தற்போது கொரோனாவின் 4 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடு ஒன்றை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது வருகிற 9 ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டுமெனில் சுகாதார பாஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.

மேலும் இதனை மீறினால் சுமார் 135 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசாங்கம் தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் எஸ்என்சிஎப் கூறியதாவது, பயணிகள் சுகாதார பாஸ் இன்றி ரயிலில் பயணம் செய்வது என்பது சாத்தியமற்றது என்று கூறியுள்ளது.

மேலும் வருகின்ற 9ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 12ம் தேதி வரைக்கும் எவரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் எந்தவித மாற்று கட்டணமும் இன்றி வேறு ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |