தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. அந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீசன்-3 மற்றும் தற்போது நடந்து வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் முன்னணி நடிகர் நாகார்ஜுனா ஆவார் . பிக்பாஸ் சீசன்-1,2 நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நாகார்ஜுனா படப்பிடிப்பு காரணமாக வெளிநாடு செல்ல இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துள்ளார். அதனால் நடிகை சமந்தா அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாற போவதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 3-வது சீசனில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை நாகர்ஜூனாவுக்கு பதிலாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.