தேனி மாவட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேசியது தொடர்பான வழக்கில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறனை மதுரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது பொய்யாக போடப்பட்ட வழக்கு என்றும், திருமாறன் அவர்களை கைது செய்ததை கண்டித்தும் சின்ஹட்ட ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமை தங்கியுள்ளார். மேலும் திருமாறனை உடனடியாக விடுதலை செய்யுமாறு பல கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் கட்சியினர் கலைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்ட 27 பேரை காவல்துறையினர் கைது செய்து தேனியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்துள்ளனர்.