டெல்லியிலுள்ள நொய்டா நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 148வது செக்டாரில் உள்ள “Noida Power Company Limited” மின் நிலையம் அருகே இன்று காலை மழை பெய்தது. அப்போது துணைமின் நிலைய மின்மாற்றியில் தீப்பிடித்து விட்டது. இந்த திடீர் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தால் ஏராளமான மின்நிலையத்தின் பொருட்கள் சேதமடைந்து விட்டன. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையை, பல மைல்கள் தொலைவிலிருந்தும் காணமுடிந்தது.