கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையில் இருந்த சமயத்தில் திடீரென செல்வராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய நண்பர்கள் ஆட்டோவை அழைத்து வர சென்ற நேரத்தில் திடீரென செல்வராஜ் உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.