‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சல்மான் கான் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அப்போது கொரோனாவின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ராதே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை. இதைதொடர்ந்து ஓராண்டாக ரிலீஸ் ஆகாது கிடப்பில் இருக்கும் ராதே திரைப்படத்தை இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமாகி வருவதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சல்மான் கான் ராதே திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியிட முடியாவிட்டாலும் ஓடிடியில் வெளியிடபடும் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் திரையரங்குகளிலும் வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.