Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றம்…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாததால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும். அதோடு பொங்கல் பரிசு டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |