எதிர்பாராதவிதமாக பிரேக் போட்ட காரணத்தினால் புல்லட் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆதம்பாக்கம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது நண்பர் மகனான கார்த்திகேயனுடன் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புல்லட்டில் பயணித்துள்ளார். அப்போது வேகமாக கார் ஒன்று வந்ததைத் தொடர்ந்து கார்த்திகேயன் எதிர்பாராதவிதமாக பிரேக் போட்டுள்ளார். இதில் புல்லட் நிலைதடுமாறி கார்த்திகேயன் புல்லட்டுடன் கீழே விழ புல்லட்டின் அடியில் சிக்கி குமரவேல் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த குமரவேலை மீட்டு போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தியாகராயநகர் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.