ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இன்று திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியுள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆயுதம் மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று காபூல் நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.