Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் அறிவிப்பு…. தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியில்லை…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி கட்சியானது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Categories

Tech |