சூடானில் கிளர்ச்சியாளர்கள் தற்பொழுதுள்ள இடைக்கால அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள நாடு சூடான். இந்த நாட்டில் தற்பொழுது இடைக்கால ஆட்சி முறை அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டாக் உள்ளார். இவருக்கு முன்பாக 1989 முதல் 2019 வரை நெடுங்காலமாக ஒமர் அல் பஷீர் என்பவர் சூடானின் அதிபராக இருந்தார். குறிப்பாக அவர் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு குறைந்தது. இதனால் மக்கள் ராணுவத்துடன் சேர்ந்து அதிபர் ஆட்சியை கலைத்தனர். இதன் பிறகு இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் சில நாட்களாகவே இடைக்கால ஆட்சிக்கு ராணுவத்தில் உள்ள சிலர் எதிராக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்திலும் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று சிலர் கிளர்ச்சியை ஏற்படுத்த சூடான் அரசு அதனை உடனடியாக செயல்பட்டு தடுத்துள்ளது. இதுகுறித்து ரஷ்யா செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “சூடான் நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி இராணுவத்தின் ஒரு சில கிளர்ச்சியாளர்கள் கூட்டமாக சென்றுள்ளர். அவர்களை அந்நாட்டு இராணுவமே சாலையில் மறித்து தடுத்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக கிளர்ச்சியில் ஈடுபட்ட அந்த 40 பேரை ராணுவ தலைமையகம் நெடுங்காலமாகவே கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மூலக்காரணமாக முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீர் செயல்பட்டு வருகிறார் என்று ஆளும் கட்சி குற்றம் சாட்டியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.