அழுகிய நிலையில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
போடியில் மனப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அழுகிய நிலையில் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூக்கில் தொங்கியவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவேதான் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தூக்கில் தொங்கியவர் கேரள மாநிலத்தை சேர்ந்த மோகன் என தெரியவந்துள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்னும் விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே மோகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.