Categories
தேசிய செய்திகள்

1 நாளுக்கு 381….. 1 வருடத்தில் 1,39,123 மரணங்கள்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!

இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. 

இன்றைய சந்ததியினர் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். காலத்திற்கு ஏற்றார்போல் பிரச்சனையும் வளர்ந்துகொண்டே போகிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவத்தை இங்கே பெரும்பாலானோர் பெறவில்லை. மனப் பக்குவம் இல்லாமல், பிரச்சனையை சமாளிக்க முடியாததால்,

இந்தியாவில் ஏராளமானோர் தற்கொலை முடிவை கையாளுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் சராசரியாக ஒரு நாளில் 381 பேர் தற்கொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் மட்டுமே இந்தியாவில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் இது 3.4 சதவிகிதம் அதிகம் எனவும் தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |