காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். ஆனால் ராஜேஷ்குமார் மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்து விட்டார்.
அதன்பிறகு கடந்த 2014ல் ராஜேஷ்குமார் மஞ்சுளாவை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மஞ்சுளா ஒருநாள் தனது சொந்த ஊருக்கு சென்றபோது ராஜேஷ்குமார், கோமதி என்ற வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து மஞ்சுளா தனது கணவரிடம் நியாயம் கேட்டார். மனைவி கேட்ட கேள்வியில் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் தகாத வார்த்தைகள் கூறியும் ஜாதி பெயரை சொல்லியும் அவமானப்படுத்தி திட்டியுள்ளார்.
அதன்பின் மஞ்சுளா இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்த வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எழில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்துடன் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவிற்கு 2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.