குமரன் தங்கராஜன் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன்பிறகு இவர் சீரியல், சினிமா என நடிகராக வலம் வருபவர். கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே இவர் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், 7 ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்ற வெப் தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதில் குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.