Categories
மாநில செய்திகள்

“பேனரால் சுபஸ்ரீ பலியான விவகாரம்”… திருச்சி, ஒகேனக்கல்லில் ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்.!!

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தீவிரமாக  தேடி வருகின்றனர் 

கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகின்றது.

Seithi Solai

மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பேனர் வைத்த முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரிவு  விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  வழக்கு  பதிவு செய்தும் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என உய்ரநீதிமன்றம் கேள்வியெழுப்ப, அதற்கு தமிழக அரசு விரைவில் ஜெய்கோபால் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தது.  இதற்கிடையே போலீசார் கடந்த 20 ஆம் தேதி சம்மன் அனுப்பியும் ஜெயகோபால் விசாரணைக்கு ஆஜராக வில்லை.  அதை தொடர்ந்து காவல்துறையினர் ஜெயகோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஒகேனக்கலுக்கு சென்று தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அவருடைய செல்போன் மற்றும் நெருங்கிய உறவினர் விவரங்கள் பட்டியலை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.  தலைமறைவான ஜெயகோபால் திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் உறவினர்கள் வீடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை போலீஸார் தீவிரமாக  தேடி வருகின்றனர்.

Categories

Tech |