பொதுத்தேர்வு நெருங்கி வரும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் ஒருசில டிப்ஸ்களை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
பொதுத்தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வருபவர். அந்த வகையில், முழுநேரமும் படித்துவிட்டு நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவதால் அஜீரண கோளாறு ஏற்படும்.
ஆகையால் அதனை தவிர்க்க சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிக நல்லது. அதேபோல் நீண்ட நேரம் படித்துவிட்டு குறைவான உறக்கம் மேற்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க இளநீர், மோர், பழச்சாறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது என்றும், மேலும் படிக்கும் போது அவ்வப்போது மிதமான இடைவெளியில் தண்ணீர் எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் தரும்.