Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. இனி வீட்டிற்கே வரும்….. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை அவர்களது வீட்டிற்கு சென்று வழங்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு ஓரிரு மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் சீராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என்பதால், மாணவர்களின் கல்வி சம்பந்தமான தேவைகளை நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் பட்சத்திலும், சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த பள்ளி மாணவர்களுக்கு உணவை வழங்க முடியாவிட்டாலும், அந்த உணவை தயாரிக்க தேவையான சத்துணவுப் பொருட்களை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தமிழக அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |