தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நவம்பர் 9, 12ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளை சேர்ந்த 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மார்ச் மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் உயர்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக பள்ளி – கல்லூரிகளில் உள்ள அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட வேண்டும் என்று முடித்து விடுமுறை விட திட்டமிடப்பட்டுள்ளது. எனவேதான் அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.