டெல்லி கார்கி கல்லூரியின் நிகழ்ச்சியின் போது நுழைந்த சில சமூக விரோதிகள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கார்கி கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கிடையே கல்லூரியின் இரும்பு கேட்டை தாண்டி வந்த சில சமூக விரோதிகள் அங்கிருந்த மாணவிகளின் உடலைத் தவறான முறையில் தொட்டும், கட்டிப்பிடித்தும் அநாகரீகமாக மிருகம் போல் அவர்கள் நடந்து கொண்டதாக மாணவிகள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த 6-ஆம் தேதி இரவில் நடைபெற்ற கல்லூரிவிழாவில் தான் ஏராளமான மாணவிகள் தாங்கள் பாலியல் ரீதியாக தவறாக சீண்டப்பட்டதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாணவிகள் இன்று கல்லூரியில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் பாதிக்கப்பட்டதாக கூறும் மாணவிகளிடமிருந்து எழுத்துப் பூர்வமான புகார் வரவில்லை என்று கூறுகின்றனர். மேலும் கல்லூரி வளாகத்தில் இருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் சுயமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.