பத்திரிக்கை துறை மற்றும் அது சார்ந்த படிப்புகளை படிப்பதற்கான விண்ணப்ப தகவலை IIMC வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கால் கல்லூரிகளுக்கு புதிதாக செல்லக்கூடிய மாணவர்களுக்கும், மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் அட்மிஷனில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் படிப்படியாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில்,
முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை ஐ.ஐ.எம்.சி (indian institude of mass communication) வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கைத்துறை மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 28ம் தேதி. மேலும் விவரங்களை www.iimc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.