Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த சோகம்… மகன் எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்த இழப்புகளால் கதறிய பெண்…!!

இரண்டு வருடத்திற்குள் தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் கே.கே.நகர்  பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது மனைவி நிர்மலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே,  தனது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் சரண்ராஜ் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தகவலறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சிறுவனின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அதோடு கணவன் மற்றும் மகனை இழந்த நிர்மலா கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அய்யனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |