Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மாணவர் மனசு பெட்டி”…. நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா…?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக தலைமை ஆசிரியர் தலைமையில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாகப் பணியாளர் உள்ளிடோர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ பிரித்துப் பார்த்து பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றது. இதில் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் புகார் தெரிவித்ததாவது, ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் அதிக அளவில் கொடுப்பதாகவும் குறைத்து கொடுக்க வேண்டும் எனவும் வகுப்பறையில் மின்விசிறி சரியாக சுழலுவதில்லை, உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட புகார் தான் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகின்றார்கள், தவறான வார்த்தைகளை பேசுகின்றார்கள், ஒழுங்கீனமான  செயல்களில் ஈடுபடுகின்றார்கள் உள்ளிட்ட புகார்களும் பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் கழிவறை கதவு உடைந்து இருப்பதாகவும் குடிநீர் வசதி குறைவாக இருப்பதாகவும் போன்ற பொதுநல புகார்களையும் பதிவிட்டு வருகின்றார்கள். இதுபோல பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறுகின்றதா என்பதை தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |