தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைக்கூறி கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும், மாணவர்கள் பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.