பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை.
ஆதலால் இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ரூபிசகாய சாந்தகுமாரி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சேதாரப்பட்டு பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தான் தனது மகளை கடத்தியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து வில்லியனூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.