Categories
அரசியல் கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையா பேசி இருக்காரு…! ”2 மாசம் ஆகிடுச்சு” வீடியோவால் சிக்கிய சீமான் …!!

பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அதே போல பிப்ரவரி 22ஆம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பங்கேற்று தந்து கண்டனத்தை தெரிவித்தார். இதில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் சீமான் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.இந்த சம்பவம் பிப்ரவரி 22ஆம் தேதி நடந்து இருந்தாலும் அதன் பிறகு அடுத்தடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காவல் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தான் தற்போது சீமான் பேசிய வீடியோவை ஆதாரமாக வைத்து குனியமுத்தூர் காவல்நிலைய காவலர் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படியில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது. 153a, 124a, 1a ஆகிய பிரிவுகளின் படி பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசியதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும்,  இரு பிரிவினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |