பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் முதியோர்கள் உயிரிழப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது.
பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. இல்லையென்றால் அடுத்த மாதத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டிருக்கிறது.
10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை தொற்றை கட்டுப்படுத்த தேவையானதாக இல்லை. எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் அதிகமாக கொரோனாவால் உயிரிழக்கிறார்கள் என்று ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சிக்கான தலைமை மருத்துவ ஆலோசகரான Dr. Susan Hopkins கூறியிருக்கிறார்.