டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்ட வைக்கோல் மின்கம்பி உரசியதால் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை முடிந்த பின்னர் வைக்கோலை விற்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வைக்கோல் டிராக்டர் மூலம் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றது. இந்நிலையில் காந்திகிராமம் பகுதியில் உள்ள டிராக்டர் வைக்கோலை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டிராக்டரில் இருந்த வைக்கோல் மின்கம்பத்தின் மீது உரசியதால் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் டிராக்டரில் இருந்த வைக்கோலை தூக்கி கீழே போட்டுள்ளனர்.
அதன்பின் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த பகுதியில் வயல்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயரே செல்லும் வகையில் சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு தாழ்வாக செல்லும் மின்கம்பியே வைக்கோலில் தீ பிடிப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது.