தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரமின் அந்நியன் திரைப்படத்தை ஷங்கர் ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் தயாரித்து வந்த கமலின் இந்தியன் 2 திரைப்படம் கமல் தேர்தலில் பிசியாக இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கை வைத்து தமிழ் சினிமாவில் பேர் வெளியாகி வெற்றியடைந்த அந்நியன் திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ளார். இதற்காக ரன்வீர் சிங் ஷங்கரிடம் கதை கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.