Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்டிபிஐ உறுப்பினர் வெட்டிப்படுகொலை – ஆர்எஸ்எஸ் வெறிச்செயல்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சலாவுதீனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது இதற்கு கண்டனம் தெரிவித்ததும், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் காரணம் என்றும் எஸ்டிபிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

 

Categories

Tech |