Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!…. கனமழையில் சேதமடைந்த படகுகளுக்கு உடனடி நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாகவும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் போன்றவைகள் சாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவைகள் உடனடியாக சரி செய்யப்படும். இந்நிலையில் தமிழக அரசு மழையின் காரணமாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து விட்டதால் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை. இதனையடுத்து புயல் பாதிப்பு பகுதிகளில் உள்ள மொத்தம் 305 மையங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உணவு, கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

முகாம்களில் இருந்து 2000 குழந்தைகள் உட்பட அனைவருக்கும் வீட்டிலிருந்ததை விட அதிக அளவில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. சென்னையில் உள்ள காசிமேட்டில் புயலின் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் பல படகுகள் தண்ணீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு கட்டு மரங்கள் சேதமடைந்திருந்தால் 32,000 நிவாரணமும், பாதி அளவு சேதமடைந்திருந்தால் 10,000 நிவாரணமும், பைபர் படகுகளுக்கு 75,000 நிவாரணமும், பகுதியாக சேதம் அடைந்து இருந்தால் 20,000 நிவாரணமும் வழங்கப்படும். இதேபோன்று இயந்திர படங்களுக்கும் சேதத்திற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். மேலும் சேத விவரங்கள் குறித்து 2,3 நாட்களில் ஆய்வு செய்து உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |