Categories
உலக செய்திகள்

வெள்ளத்தால் இடிந்து விழுந்த வரலாற்று கோட்டை.. இடிந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள்.. வெளியான வீடியோ..!!

ஜெர்மனியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்போது வரை 133 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சமீப நாட்களில் கனத்த மழை பொழிந்தது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலும் வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்கள் என்று மொத்தமாக வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய நிலையில் இருக்கிறது.

https://twitter.com/Internl_Leaks/status/1416593227537272832

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் எர்ஃப்ட்ஸ்டாட்-பிளெசெமில் என்ற கிராமத்தில் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் 3 அடுக்கு மாடி வீடுகளும், வரலாற்று கோட்டையும் இடிந்து விழுந்துவிட்டது.

அஹ்ர் ஆற்றுக்கு இடையில் இருக்கும் ஈபிள், டெர்னாவ் போன்ற நகரங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது வரை 133 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |