நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனையை தமிழக முதலமைச்சர் தற்போது ஆலோசனை நடத்துகின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்களாக உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள்.
இதில் புயல் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்வது ? பொதுமக்களை எப்படி பாதுகாப்பது ?நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே கஜா புயலின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மகாபலிபுரத்தில் இருந்து காரைக்குடி பகுதியில் இருக்க கூடிய பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பது, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி புயல் கரையை கடக்கும் போது முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்படும். ஏனென்றால் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க கூடிய பல்வேறு விஷயங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழல் இருக்கின்றது, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்தும் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் பேசப்படுகின்றது.