புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மளிகை கடை திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்த போது ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை செய்து கொண்டிருந்த மளிகை கடைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார்.