Categories
Tech

உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் போதவில்லையா…? வரப்போகும் புதிய அம்சம்…!!!

ஆண்ட்ராய்டு போனில் ஸ்டோரேஜ் பற்றாக்குறையை தீர்க்க புதிய அம்சம் வரவிருக்கிறது.
நம் போனில் அதிக ஸ்டோரேஜ் இருந்தாலும், சில சமயங்களில் போதாது. அதற்காக நாம் சில செயலிகளை அழிக்க நேரிடும். எனவே, நாம் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை வாங்க நினைப்போம். ஆனால், இது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்ட இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி, போன் செயலியின் ஸ்டோரேஜ்-ஐ 60% வரைக்கும் குறைக்கலாம். இதில் நம் தனிப்பட்ட எந்த தரவுகளும் பாதிக்காது என்பது தான் இந்த அம்சத்தின் சிறப்பு.
இதன் மூலம் செயலியை அழிப்பதற்கு பதிலாக ஆர்கைவ்ட் ஏபிகேவாக மாற்றலாம். அதற்குப்பிறகு, தேவைப்படும் போது அந்த செயலியை மீண்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Categories

Tech |