Categories
சினிமா தமிழ் சினிமா

“வயிறு எரியுது” போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்றது…. சத்யா கொலையில் கொந்தளித்த கஸ்தூரி….!!!!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் ராமலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த  சத்யபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்ததால் தொடர்ந்து சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து ஒரு முறை போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சத்யபிரியா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சத்யாவை வழிமறித்த சதீஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தகராறு செய்துள்ளார்.

இதற்கு சத்யபிரியா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சதீஷ் ஓடும் ரயிலின் முன்பாக சத்யாவை தள்ளிவிட்டார். இதில் சத்யாவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சத்யாவின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் சத்யாவின் கொடூரமான கொலையை கேள்விப்பட்ட அவருடைய தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சத்யபிரியாவின் தாய் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கிறார். சதீஷ் இன் தந்தை அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். போலீஸுக்கு இந்த கொடுமைனா என்னத்த சொல்றது என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் விருப்பமில்லாத ஒரு பெண்ணை‌ டார்ச்சர் பண்றது விடா முயற்சி மற்றும் வீரம் புண்ணாக்குனு சொல்றவனையும், அத நம்புறவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது தலைவனா இருந்தாலும் சரி சினிமாவா இருந்தாலும் சரி. வயிறு எரியுது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |