சினிமா துறையில் இன்னும் 20 வருடங்கள் நிலைத்திருக்க ஆசைப்படுவதாக ராஷி கண்ணா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் ராஷி கண்ணா. இவர் தற்போது சர்தார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இந்த நிலையில் இவர் திரையுலகிற்கு வந்து எட்டு வருடங்கள் நிறைவடைகின்றது.
இதனால் இவர் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, “எனது சினிமா பயணம் நன்றாக போய்க் கொண்டிருக்கின்றது” நான் நடித்த படங்கள் தோல்வி அடைந்த சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றது. பள்ளி கல்லூரிகளில் நான் வெக்கப்படும் ரகம் இல்லை. கலாட்டா செய்யும் பெண் இல்லை. அமைதியாக இருப்பேன். கோபம் வருவது அரிது. எனது கனவு கதாபாத்திரங்கள் நிறைய இருக்கின்றது. ஆக்சன் படம் பண்ண வேண்டும். திகில் பேய் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. சினிமா வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கின்ற.து நான் நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் இருபது வருடங்கள் சினிமா துறையில் நிலைத்திருக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.